யு.எஸ்.தமிழன்

தமிழனின் பார்வையில் அமெரிக்கா

ஈராக்ன் போர் – அமெரிக்காவின் அவசியம்

Posted by usthamizhan மேல் பிப்ரவரி 20, 2007

ஈராக் போரை நிறுத்தி/முடித்துவிட்டு படைகளை விலக்கிக் கொள்வதில் அமெரிக்காவிற்கு பல சிக்கல்கள் உள்ளன.

IINK

நவம்பர் 2006 மத்தியில் ஈராக்கில் 152,000 அமெரிக்க படை வீரர்கள் அமர்தப்பட்டிருந்தனர். கடந்த மாதம் படை பலத்தை இன்னும் உயர்த்தவேண்டும் என அதிபர் புஷ் குறிப்பிட்டிருந்தார். பிரதிநிதிகள் சபையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டாலும், புஷ் தன் அதிகாரத்தைக் கொண்டு மேலும் 21,500 படை வீரர்களை அனுப்புவார் என்றே தெரிகிறது. இதன் மூலம் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கை 173,500+ ஆக உயரக்கூடிய வாய்ப்புள்ளது.

ஈராக் போருக்கான அமெரிக்க மக்களின் ஆதரவு தேய்ந்துவரும் இத்தருணத்தில் படைகளை குறைக்கச் சொல்லி ஜனநாயக கட்சியினர் புஷ்சிற்கு குடைச்சல் தர ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க படைகளை குறைப்பதினால் அமெரிக்காவிற்கு பெரும் நஷ்டம் ஏற்படும். திரும்ப வரும் படை வீரர்களுக்கு வழங்க தேவையான பணியிடங்கள் காலியாக இல்லை. இதன்மூலம் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும் வாய்புகள் உண்டு. சற்றே முன்னேறி வரும் அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் சரியத்துவங்கிவிடும். 2000த்தின் டாட்.காம் சரிவிலிருந்து மெதுவாக உயிர்பெற்றிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் மற்றொரு சரிவை சந்திக்க தயாராக இல்லை. மேலும் ஏற்கனவே துவண்டுகொண்டிருக்கும் அமெரிக்க ரியல் எஸ்டேட் மார்க்கெட்டுடன் இந்த வேலையில்லா திண்டாட்டமும் கைக்கோர்த்துக் கொண்டால் அது அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும்.

அமெரிக்காவின் பெரும் பொருளாதார சரிவுகள் போர்களுக்கு பின்பு ஏற்பட்டவை என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.

ஈராக் போர் முடிவின்றி நீண்டுகொண்டே போவதாலும் மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டே போவதால் புஷ் பெரும் நெருக்கடியில் இப்போது உள்ளார். மக்களின் ஆதரவின்மையினாலோ, ஜனநாயகக்கட்சி ஒத்துழைக்க மறுப்பதாலோ புஷ் படைகளை விலக்கிக்கொண்டால் அது மாபெரும் உள்நாட்டுக் குழப்பத்தை விளைவிக்கும். அதனால் புஷ் படைவீரர்களை அமெரிக்காவிற்கு திருப்பப்பெருவார் என்று எண்ணுவதற்கில்லை. அப்படியே அவர் படைவீரர்களை திருப்பப்பெற்றாலும் அவரின் பதவி முடிவதற்கு மிக அருகிலேயே அந்த முடிவுகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதன் மூலம் புஷ்ஷின் பதவிகாலத்தில் எந்த பொருளாதார பின்னடைவுகளும் இன்றி அவர் ஆட்சியைவிட்டு விலகிடும் வாய்ப்புகள் உள்ளது.

இதை அறிந்தே அடுத்த ஆட்சியை பிடிக்க கனவுகாணும் ஜனநாயகக் கட்சியும் புஷ்ஷை படைகளை இப்போதே குறைக்கச்சொல்லி நெருக்கடி கொடுத்துவருகிறார்கள். இந்த கண்ணாமூச்சிகளுக்கெல்லாம் அசரக்கூடிய ஆளாக புஷ் இல்லை என்பது அவரது சமிபத்திய பேச்சுகளில் தெளிவாக உள்ளது. பிரதிநிதிகள் சபை அவருடைய படை அதிகரிப்பிற்கான மனுவை நிராகரித்ததை புஷ் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இரு சபைகளும் நிராகரித்தாலும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது எண்ணத்தை செயல்படுத்துவார் என்பது கண்கூடாக தெரிகிறது. அப்படியே நெருக்கடி அதிகமானால் தனது பதவிகாலம் முடிவுறும் தருவாயில் படைகளை விலக்கிக்கொண்டு தனகு பிறகு வரும் ஆட்சியாளருக்கு பெரும் பொருளாதார நெருக்கடியை கொடுக்க புஷ் தயங்க மாட்டார்.

IraqIran

சரி அப்படியே மக்கள் ஜனநாயகக் கட்சியின் துணையுடன் ஒரு எழுச்சி போராட்டம் நடத்தினால் (அப்படி நடத்த முதுகெலும்லில்லாத ஜனநாயக கட்சியில் ஒரு தலைமையில்லை என்பதே உண்மை)? இருக்கவே இருக்கிறது ஈரான். படைகளை விலக்கிக்கொள்வதைத்தவிர புஷ்ஷின் கையில் உள்ள ஒரே மாற்று உபாயம் ஈரான். ஈரானின் செயலும் அதற்கு துணைபுரிவதாகவே உள்ளது. ஈரானின் சமிபத்திய அணு சோதனைகளை காரணம்காட்டி ஈரானின் மீது போர்த்தொடுக்க அமெரிக்க படைகளின் கைகளில் அரிப்பு ஏற்பட்டிருப்பது கண்கூடு. பிபிசி செய்தியும் அதையே உறுதிசெய்கிறது. ஈரானின் அணு சோதனைகள் அயுதத்தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகின்றதென்றோ ஈராக் “தீவிரவாதிகளுக்கு” ஈரான் அயுத உதவி வழங்குகிறதென்றோ அமெரிக்கா நிறுவித்தால் ஈரான் போர் தவிர்க்கமுடியாதாகிவிடும். இதில் இரண்டாவது காரணம் தமிழ்நாட்டு கஞ்சா வழக்குபோல எளிதில் அமெரிக்காவினால் ஜோடிக்க முடியும்.

அதனால் ஈரானின் போர் புஷ்ஷிற்கு உள்நாட்டில் ஏற்படும் நெருக்கடியை பொருத்தே அமையும்.

யு.எஸ்.தமிழன்

13 பதில்கள் -க்கு “ஈராக்ன் போர் – அமெரிக்காவின் அவசியம்”

 1. Vijay said

  vital information

 2. நன்றி விஜய்!

 3. bsubra said

  excellent analysis of the current developments. bang on!

 4. thanks பாபா!

 5. நல்ல அலசல்கள்/தகவல்கள். நன்றி.

 6. நன்றி சுல்தான்!

 7. அருமையானதொரு பதிவு நன்பரே…அப்படியே புட்டு புட்டு வைத்துள்ளீர்கள்..!!!!!!!!

 8. நன்றி ரவி.

 9. santhosh said

  Are you still in Atlanta? Can you email me your contact details to sjsanthose@gmail.com.

 10. santhosh said

  Good ones. But this time I dont think Bush will get any support from either UN or their allies like UK since they are already on fire due to the war on Iraq. I dont think even the US troops are ready for another war since they are already. They are almost in a situation similar to vietnam. The funniest part is they are the strongest(thats what they claim) but till now they havent won any war. Where ever they go they are f***** up.. :))

 11. santhosh said

  //திரும்ப வரும் படை வீரர்களுக்கு வழங்க தேவையான பணியிடங்கள் காலியாக இல்லை. இதன்மூலம் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும் வாய்புகள் உண்டு.//
  இந்த வாதம் எப்படி சரியாகும்? அவர்கள் சண்டைக்கு போனால் தான் சம்பளமா என்ன? அப்படி இல்லையே? அவர்களுக்கு என்று ஆண்டுக்கு ஒரு பட்ஜெட் போடப்படும். அவர்கள் போருக்கு போனால் தான் அதிக செலவே தவிர அப்படி இல்லையென்றால் வேலையின்மை எல்லாம் அதிகரிக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவர்கள் தங்களது military baseஇல் பயிற்சி எடுத்துக்கொண்டு இருப்பார்களே தவிர வேலைக்கு எல்லாம் செல்வார்கள் என்று நினைக்க வில்லை.

 12. சந்தோஷ்,

  போருக்காக பெரிய அளவில் ஆட்சேர்ப்பு நடைபெற்றுள்ளது, நடைபெறிகிறது. போருக்காக ஒதுக்கிய பட்ஜெட் பணமிருப்பதால் அவர்களுக்கெல்லாம் சம்பளம் தர முடிகிறது. போர் முடிந்துவிட்டால், இந்தப் போர்வீரர்களை பணிநீக்கம் செய்வதைத்தவிர அரசாங்கத்திற்கு வேறு வழிகிடையாது. அதைப்போலவே அமெரிக்க ராணுவத்தில் உள்ள பலரும் தற்காலிக பணியாளர்களே, மற்றும் பலர் ஆர்மி ரிவர்வ்கள், இவர்கள் திரும்பவந்தால் இவர்களுக்கு தேவையான பணியிடங்களை உருவாக்கும் சக்தி தற்போதய நசிந்து வரும் அமெரிக்கப் பொருளாதாரதிற்கு இல்லை. அதனால்தான் வேலையில்லா திண்டாட்டம் வரும் என்று கூறுகிறார்கள்.

 13. Santhosh,

  I don’t think US is going to require any kind of approval from UN or any other countries. Neither the Afghanistan war nor the Iraq war was an unanimous decision by its allies. If a war is seen to be required by Mr.President, he could forge to create the circumstances.

  Wars are never won or lost, but lives are. Quotes apart, victory and defeat are defined by the objective of the war. Did Bush fulfil his objective in going to the war? Yes! He did remove Saddham and Iraq is ransacked beyond repair. There is no way another ruler from that part of the earth could ever attempt to go against the US or its interests. The idea of the war is to instil fear in those minds and I do feel that he had succeeded in creating that fear. And remember the war is fought only partly in the warfields, its the peoples mind that is weakened. For the next few decades US has one less thing to worry about and thats what Bush dreamed about.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: